சென்னை மற்றும் தமிழகத்தில் பல இடங்களில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு புவி வெப்பமடைதலே காரணம் என்று பிரான்சில் நடைபெற்று வரும் பருவ நிலை மாற்றம் குறித்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
நச்சு வாயுக்கள் வெளியேற்றம் அதிகரித்து பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பதால் தான் இத்தகைய பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன் என்பது குறித்து விவாதிக்க 150 நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசீல் நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் கலந்துகொண்ட தில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் துணை தலைமை இயக்குநர் சந்திரபூஷண் சென்னை நகரில் பெய்து வரும் இடைவிடாத பலத்த மழைக்கு பூமி வெப்பமயமாகி வருவதுதான் காரணம் என்றார். காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழைக்கும் பருவ நிலை மாற்றம்தான் காரணம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
மீண்டும் எதிர்கலங்களிலும் இதுபோன்ற கனமழை தொடரும் என்பதால், இதனை கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்கப்பட வேண்டும் என்று நிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை நிபுணர் ராகேஷ் கமால் கொள்ள அறிவுரித்தினர்.
358 total views, 1 views today