வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 2,500 அடி உயரத்தில் நெக்னாமலை ஊராட்சி உள்ளது. இங்கு 800–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 463 வாக்களார்கள் உள்ளனர்.
இந்த மலைக்கு சாலை வசதி ஏதும் கிடையாது. இந்த நிலையில் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்காக நேற்று (வியாழக்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெற்றது .
இதுவரையில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கழுதை மூலமே எடுத்து செல்லப்பட்டன. ஆனால் இம்முறை கழுதைகள் ஏதும் கிடைக்காமல் போனதால் வாக்குப்பதிவு இயந்திரங்களை மலைவாழ் கிராம மக்கள் உதவியுடன் வாக்குப்பதிவுக்கான மண்டல அதிகாரிகள் 3 பேர், ஒரு பெண் உதவியாளர் உள்பட 4 பேரும் மற்றும் போலீசார் 4 பேரும் தலையில் சுமந்து 7 கிலோ மீட்டர் தூரமுள்ள மலைப்பாதை வழியாக எடுத்து சென்றனர். இதே போல் ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்குதான் முடிவடைகிறது.
277 total views, 1 views today