வாக்கு எண்ணும் மையத்துக்கு அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு தெரிவித்தார்…வாக்கு எண்ணும் வளாகத்துக்குள் முற்றிலும் செல்போன்கள் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணும் முகவர்கள் ஆகியோர் அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதியின்றி எந்த ஒருநபரும் வாக்கு எண்ணும் அறையை விட்டு வெளியில் செல்லவோ, உள்ளே வரவோ அனுமதியில்லை. ஒழுங்கீனம் மற்றும் கீழ்படியாமையின் காரணமாக வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள எந்த நபரையும் வெளியேற்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அதிகாரமுண்டு.
வாக்கு எண்ணும் முகவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜையை தவிர வாக்கு எண்ணும் அறையின் எந்த பகுதிக்கும் செல்ல அனுமதியில்லை.
172 total views, 1 views today