தமிழகத்தில் மழை, வெள்ளதாள் தங்களின் ஆவணங்களை இழந்தவர்களுக்கு, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
வெள்ளத்தாள் பொதுமக்கள் தங்களது பல்வேறு முக்கிய ஆவணங்களை இழந்துள்ளனர், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை,ஆதார் அடையாள அட்டை,வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்கள், இந்த ஆவணங்களை இழந்துள்ள பொது மக்களுக்கு அவற்றின் நகல்களை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் வருவாய் வட்டங்களிலும், கல்வி சான்றிதழ்களுக்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் வருகின்ற 14 Dec 2015 முதல் இரண்டு வாரங்களுக்கு நடத்தப்படும்.
இந்த முகாம்களில் அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும், மத்திய அரசின் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று ஒரு வாரத்திற்குள்ளாக நகல் ஆவணங்களை கட்டணமின்றி வழங்குவர்.சிறப்பு முகாம்களில் மட்டுமன்றி, பொதுமக்கள் விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மூலமாகவும் கொடுத்து நகல் ஆவணங்களைப் பெறலாம்.
தமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டத்தின்படி 1908 பிரிவு 57(5)-ன்படி, இந்த முகாம்களில் வழங்கப்படும் அணைத்து நகல் ஆவணங்களும்,மூல ஆவணங்களாகவே கருதப்படும்.
240 total views, 1 views today