வேலூரில் அத்வானி பிரசாரம்

“தமிழகத்தில், தி.மு.க.,அ.தி.மு.க., போட்டியிடுவது என்பது மட்டும், முன் நடந்தது. இத்தேர்தலில், அடிப்படையே மாறிவிட்டது. தற்போது, பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க., இடையே போட்டி என்றாகி விட்டது. வானவில்லின் வண்ணம் போல உள்ள, பா.ஜ., கூட்டணி, புதிய சாதனை படைக்கப்போகிறது,” என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறினார்.

வேலூர் தொகுதியில் போட்டியிடும், பா.ஜ., கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், வேலூர் அடுத்த முள்ளிப்பாளையம் மாங்காய் மண்டி மைதானத்தில் நடந்தது.

இதில் பங்கேற்ற, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி பேசியதாவது:நாட்டின் முதல் லோக்சபா தேர்தல், 1952ல் நடந்தது. தற்போது, 16வது லோக்சபா தேர்தல் நடக்கிறது. 1952 முதல், அனைத்து தேர்தல்களிலும், நான் பங்கெடுத்து உள்ளேன். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, நான் துணை பிரதமராக இருந்து, ஆறு ஆண்டு சிறப்பாக பணியாற்றினேன்.

இந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., மாபெரும் வெற்றி பெற்று, மோடி பிரதமராவார்.ஏழ்மையை ஒழித்து, மக்களை வளமாக வாழச்செய்வது, அறியாமையை நீக்குவது, பெண்களை கல்வி அறிவு பெறச்செய்வது போன்றவற்றையே, ஒரு நல்ல அரசு செய்ய வேண்டும். பா.ஜ., ஆளும், குஜராத், மத்திய பிரதேச மாநில அரசுகள் இதைச் செய்கின்றன.

தமிழகத்தில், தி.மு.க.,- – அ.தி.மு.க., போட்டியிடுவது என்பது மட்டும், முன் நடந்தது. இத்தேர்தலில், அடிப்படையே மாறிவிட்டது. தற்போது, பா.ஜ., — தி.மு.க., — அ.தி.மு.க., இடையே போட்டி என்றாகிவிட்டது. வானவில்லின் வண்ணம் போல உள்ள பா.ஜ., கூட்டணி, புதிய சாதனை படைக்கப்போகிறது.இக்கூட்டணியில், அனைத்து தரப்பு மக்களும் உள்ளனர்.

இதைக்கண்டு தான், மற்ற கட்சிகள் மிரண்டு போய் உள்ளன. எப்படி அரசியலும், தேர்தலும், மாறிவிட்டதோ, அதேபோல, தமிழகத்தில், பா.ஜ., தலைமையில், கட்சிகள் கூட்டணி சேர்ந்திருப்பதால், இக்கூட்டணி தான் வெற்றி பெறும்.மத்தியில், காங்., ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோகமாக வெற்றி பெறும். ஜூன் மாதம், மோடி தலைமையில் புதிய அரசு அமையும். அதில், வேலூர் சார்பில், ஏ.சி.சண்முகம் பிரதிநிதியாக இருப்பார்.இவ்வாறு, அத்வானி பேசினார்.

தமிழகத்தில், அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகளுக்கு இணையாக, மக்கள் ஆதரவு பெற்ற கட்சியாக பா.ஜ., வளர்ந்துள்ளது,” என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

வேலூரில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க, நேற்று, சென்னை வந்த அத்வானி, விமான நிலையத்தில் அளித்த பேட்டி:தமிழகத்தின், 39 லோக்சபா தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி, இதுவரை போட்டியிட்டது கிடையாது.

தற்போது வலுவான கூட்டணி அமைத்து, 38 தொகுதிகளில் (நீலகிரி தொகுதியை தவிர்த்து) போட்டியிடுகிறது.தமிழகம், கேரளா உட்பட நான் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம், மக்களின் ஆதரவு பெருகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் மட்டுமே, மக்களின் ஆதரவு பெற்ற கட்சிகளாக விளங்கின.

தற்போது பா.ஜ.,வும் அவர்களுக்கு இணையாக, மக்கள் ஆதரவு பெற்ற கட்சியாக வளர்ந்துள்ளது.இந்த தேர்தலில் முக்கிய நிகழ்ச்சியாக, தென் மாநிலங்களில் தே.ஜ., கூட்டணி வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது. ‘பா.ஜ., தேர்தல் அறிக்கையில் தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை’ என, சிலர் கூறுகின்றனர்.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இருந்தே இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.பா.ஜ., தேர்தல் அறிக்கையிலும், தமிழக பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.இவ்வாறு, அத்வானி பேசினார்.

225 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.