வேலூர் அருகே விரிஞ்சிபுரம்– வடுகந்தாங்கல் சாலையில் உள்ள பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விரிஞ்சிபுரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது பாலாற்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்துவதற்காக ஏற்றி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதைத்தொடர்ந்து 6 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்
244 total views, 1 views today