வேலூர் மாவட்டத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ள நிலையில் அவர்களில் 27 பேர் வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சைதாப்பேட்டை, ஆர்.என் பாளையம் ,கஸ்பா, கொணவட்டம் ஆகிய பகுதிகள் நோய் பரவலை தடுக்கும் பொருட்டு அப்பகுதி containment zone ஆக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள தெருக்கள் அனைத்தும் சீல் இடப்பட்டுள்ளது.அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு வரும் சனிக்கிழமை (18-04-2020) முதல் பால், மளிகை ,காய்கறிகள் ஆகியவை வேலூர் மாநகராட்சி, கூட்டுறவு துறை மற்றும் மகளிர் திட்ட பணியாளர்களைக் கொண்டு பிரத்தியேக வாகனங்கள் மூலம் காலை 6 மணி முதல் 10 மணி வரை அப்பகுதிகளில் நேரடியாக விநியோகிக்கப்பட உள்ளது. இப்பணியில் மொத்தம் 30 வாகனங்கள் ஈடுபட உள்ளது.
இது தவிர மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் ஆர்டரின் பேரில் வீட்டிற்கே சென்று வழங்கும் வகையில் “ஹலோ வேலூர்” என்ற திட்டம் வரும் சனிக்கிழமை (18-04-2020)முதல்* நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.பொது மக்கள் தினமும் தங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக தொலைபேசி எண்கள் 0416-2252501 மற்றும் 0416-2252661 என்ற எண்ணிற்கு மேற்படி தினங்களில் ஆர்டர் செய்யலாம். ஆர்டர் செய்யப்பட்ட மறுநாள் காலை அப்பொருட்களை வீட்டிற்கு நேரடியாக cash on delivery முறையில் பணத்தை பெற்று பொருட்கள் டெலிவரி செய்யப்படும். இதற்காக ஒரு ஆர்டரின் குறைந்தபட்ச மதிப்பு ரூபாய் 500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்கும் பொருட்டு வெளியே வருவதை தடை செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் கட்டுப்பாடுகள் விதித்த பகுதிகளில் பொதுமக்கள் அவசரத் தேவைகள் புகார்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்கள்”1077″ 0416-2258016 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவிப்பு
747 total views, 1 views today