9 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இன்றைய லீக் ஆட்டத்தில், நேபாளத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, ஹாட்ரிக்ஹாட்ரிக் வெற்றியோடு காலிறுதி முன்னேரியது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.மிர்பூரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி நோபாள அணியுடன் மோதியது. முதலில் விளையாடிய நேபாள அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. அடுத்து இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கியது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரிஷப் பன்ட், இஷான் கிஷான் களமிறங்கினர். இந்த ஜோடி தொடக்கம் முதலே நேபாள பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. அதிரடியாக விளையாடிய ரிஷப் பன்ட் 18 பந்துகளில் அரை சதம் அடித்தார். இது ஒரு புதிய உலக சாதனை ஆகும். இதற்கு முன் 19 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ட்ராவான் கிரிஃப்பித் 19 பந்துகளில் அரை சதம் அடித்ததுதான் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை இந்திய வீரர் முறியடித்துள்ளார்.
200 total views, 1 views today