கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பூமி சுழற்சி வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு பற்றி கனடாவின் அல்பெர்டா பல்கலைகழக பேராசிரியர் கூருகையில், பூமியின் வெப்பம் அதிகரித்து வருவதால், துருவப் பகுதிகளில் உள்ள பனி மலைகள் வேகமாக உருகி வருகின்றன இதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் துருவங்களின் அடர்த்தி குறைவும் நிலவின் ஈர்ப்பு சக்தியும், பூமியை மெதுவாக சுழலச் செய்வதாக அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு பூமி மெதுவாகச் சுழல்வதால்ஒரு நாளின் நீளம் அதிகரிக்கும் என்றும் அடுத்த நூற்றாண்டிற்குள், ஒரு நாள் பொழுதில், 1.7 மில்லி நொடிகள் நீளமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் பருவ நிலை மாற்றம், கடல் நீர்மட்ட உயர்வு போன்றவற்றின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, கடலோர நகரங்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
349 total views, 1 views today