தமிழகத்தை வாட்டும் அதிகன மழையின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு, வருத்தத்திற்கும், சீதோஷண உடல் நிலை குறைபாடுகளுக்கும் உள்ளாகியுள்ளார்கள் என்பதை வேதனையுடன் உணர்கின்றோம்.
வேலூர் மாவட்ட கண் மருத்துவன் என்கிற முறையில் தமிழக மக்களின் இன்னலான இத்தருணத்தில் அவர்களுக்கு உதவியாக, உறுதுணையாக நிற்க விழைகிறேன். நமது கலைஞர் மருத்துவ ஆராய்ச்சி மையம், வேலூர் கண் மருத்துவமனை இன்று 02.12.2015 முதல் வருகின்ற 05.12. 2015 அல்லது மழை நிற்கும் வரை,
- ஒரு 24 மணி நேர இலவச பொது மருத்துவமனையாக இயங்கும்,
மருத்துவ ஆலோசனை கட்டணம் கிடையாது. - முன்பதிவு இல்லாமலேயே நோயாளிகள் மருத்துவ ஆலோனையைப் பெறலாம்,
- கண், காது, மூக்கு, தொண்டை, பல் மட்டுமல்லாது அனைத்து உடல் நல குறைபாடுகளுக்கும் இலவச மருத்துவ வழங்கப்படும்.
இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து செயல்பட முன் வந்திருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சேவையை பொது மக்களுக்கு உரிய தாக்க தன்னலமின்றி உழைக்க முன் வந்திருக்கும் சேவை நிறுவனங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கட்டான இந்த சூழ்நிலையில் ஏழை மக்களுக்காகவும், பொருளாதார அடிப்படையில் பெரும் நலிவை சந்தித்திருக்கும் மத்திய, நடுத்தர குடும்பத்தினருக்கும், மழையினால் சொந்தங்களை பிரிந்து தவிக்கும் குடும்பங்களுக்கும் கலைஞர் மருத்துவ ஆராய்ச்சி மையம், வேலூர் கண் மருத்துவமனை என் றென்றும் உறுதுணையாக நிற்கும் என்று உறுதி சுகிக்கிறேன்.
மருத்துவ உதவிக்கு – 09843272176, 09750 384444.
மருத்துவரை நேரடியாக தொடர்பு கொள்ள –09750354 4 44.
பொதுமக்கள் அனைவரும் மருத்துவ சேவை தேவையானோருக்கு இந்த தகவலை தெரிவித்து, மருத்துவ உதவியை அனைவரும் பெற்றிட செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
தி.ச. முகமது சயி,
தலைமை மருத்துவர்,
கலைஞர் மருத்துவ ஆராய்ச்சி மையம்,
வேலூர் கண் மருத்துமனை,வேலூர்.
1,992 total views, 2 views today