இந்தியாவில் தொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவு, மற்ற பொருட்கள் விலை சரிவு ஆகியவை இந்திய பொருளாதாரத்துக்கு சாதகமாக உள்ளது. இந்தியாவுடன் போட்டி போடும் நிலையில் உள்ள நாடுகள் மிகுந்த சவால்களை சந்தித்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையி்ல் பொருளாதாரத்தில் சீர்திருத்தம் அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர்.
புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்க ஸ்டார்ட் அப் இந்தியா திட்டமும், பெண் தொழில் முனைவோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டமும் தொடங்கப்பட இருக்கிறது மற்றும் இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் ஒவ்வொரு கிளைகளிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு கடன் உதவி அளிக்க வேண்டும் என்று அருண்ஜெட்லி கூறினார்.
339 total views, 2 views today