பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கரும்பு வரத்து துவங்கியது. இதில் ஒருகட்டு ரூ.500 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் விளைச்சல் அதிகமாக இருந்தாலும், தற்போது பொங்கல் பரிசாக ஒவ்வொரு ரேஷன்கார்டு தாரர்களுக்கும் கரும்பு வழங்கப்படுவதாக அரசு அறிவித்தைதையடுத்து, மார்க்கெட் வியாபாரிகளுக்கு போதிய கரும்பு கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில், பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கரும்பு வரத்து குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.
இருப்பினும், பெங்கலையொட்டி கரும்புக்கு அதிக கிராக்கி உள்ளதால் விலை அதிகரித்துள்ளது. கடந்த பொங்கலின்போது 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு அதிகபட்சமாக ரூ.300 முதல் ரூ.400வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது ஒரு கட்டு ரூ.360 முதல் ரூ.500வரை விற்பனை செய்யப்படுகிறது.
761 total views, 2 views today