ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 171 ரன்கள் குவித்தார்.
இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் இளம் வேகப் பந்துவீச்சாளர் பரின்தர் சரண் புதுமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளுடன் ஆட்டத்தை துவக்கினார் ரோஹித் ஷர்மா. முதல் 4 ஓவர்களில் 28 ரன் குவித்து அதிரடியாக ஆரம்பித்தது, 9 ரன்கள் குவித்த நிலையில் தவான் வெளியேறினார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி களமிறங்கிய முதல் பந்தே பவுன்சராக வீசப்பட்டது. 2014ம் ஆண்டு டிசம்பரில் சென்ற ஆண்டு பயணம் செய்த போதும் கோலியை பவுண்ஸரொடு ஆஸி அணி வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
முதல் 10 ஓவரில் இந்தியா ஒரு விக்கெட்டை இழந்து 52 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து களம் இறங்கிய கோலி, ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலியா பந்துவீச்சை சிதறடித்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இவர் தனது 9வது சதத்தை நிறைவு செய்தார்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலி, 91 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவர் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இதைத் தொடர்ந்து கேப்டன் தோனி களம் புகுந்தார். மறுமுனையில் விளாசி வந்த ரோகித் 156 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
பின்னர் கேப்டன் தோனி 18 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். கடைசி நேரத்தில் களம் இறங்கிய ஜடேஜா 10 ரன் எடுத்தார். ரோகித் அபாரமாக விளையாடி 171 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் குவித்தது.
334 total views, 2 views today