பீகார் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி திரட்டும் வகையில் ஆடம்பர பொருட்கள் மீது 13.5 சதவீதம் வரி விதிக்க பீகார் அரசு முடிவு செய்துள்ளது. முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அழகுப்பொருட்கள், வாசனை திரவியம், ஹேர் ஆயில், கிலோ ரூ. 500க்கும் மேல் விற்கப்படும் இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகளுக்கு 13.5 சதவீ.த வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், சமோசா, கச்சோரி, நொறுக்கு தீனி வகைகளுக்கும் இந்த வரி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
326 total views, 1 views today