பேஸ்புக் பயன்பாடு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்த நிலையில் சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் இந்திய ஃபேஸ்புக் வருவாய் 27 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
014 ஆம் ஆண்டு மார்ச் மாத முடிவில் இந்தியாவில் ஃபேஸ்புக் வருவாய் 97.6 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது 2015 ஆம் ஆண்டு நிதி ஆண்டு முடிவில் அதன் வருவாய் 27 சதவிகிதம் உயர்ந்து 123.56 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2012-13ல் இதன் வருவாய் 75.6 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா தான் மிகப்பெரிய சந்தையாக திகழ்கிறது. தற்போதைய சூழ்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருவாயின்படி, இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோரில் ஒருவருக்கு சராசரியாக 9 ரூபாய் என்ற மதிப்பில் பேஸ்புக் நிருவனம் வருவாயை ஈட்டி வருகிறது. அமெரிக்காவில் ஒரு ஃபேஸ்புக் பயன்பாட்டாளர் மூலமாக 630 ரூபாயை ஃபேஸ்புக் வருவாயாக ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
191 total views, 1 views today