கேரள மாநில அரசின், சுற்றுலா துறை சார்பில் திருவனந்தபுரத்தில் நிசாகந்தி நடன, இசை விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா புதன்கிழமை தொடங்கி, ஜனவரி27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், கேரள அரசின் நிசாகந்தி விருதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, கேரள முதல்வர் உம்மன் சாண்டி வழங்கி கௌரவித்தார்.
அப்போது, பேசிய முதல்வர் உம்மன் சாண்டி, இளையராஜாவுக்கு நிசாகந்தி விருதை வழங்குவது பெருமையாக உள்ளதாகவும், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்க 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் உடனே வழங்கப்படும் என்றார்.
309 total views, 1 views today