2016ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 22வது இடம்

indi-MMAP-mdஉலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடு பட்டியலில் ஜெர்மனி முதல் இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 22-வது இடம் கிடைத்துள்ளது.

 

 

 

சுவிட்சர்லாந்தை சேர்ந்த உலக பொருளாதார மையம், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. சுமார் 60 நாடுகளில், நிலத்தன்மை, துணிச்சல், கலாச்சார செல்வாக்கு, தொழில் முனைவோர், பாரம்பரியம், வணிகம், வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார செல்வாக்கு போன்ற 24 தகுதிகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து 16,200-க்கும் மேற்பட்ட மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 4,500 பேர் தொழில் நிறுவனங்களில் மூத்த அதிகாரிகளாக உள்ளவர்கள். மற்றவர்கள் சாதாரண மக்கள்.

இந்த ஆய்வின் முடிவில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை கனடாவும், மூன்றாம் இடத்தை இங்கிலாந்தும் பிடித்துள்ளன. 4-வது இடம் அமெரிக்காவுக்கும், 5-ம் இடம் சுவிடனுக்கும், 6-வது இடம் ஆஸ்திரேலியாவுக்கும், 7-வது இடம் ஜப்பானுக்கும், 8-வது இடம் பிரான்சுக்கும், 9-வது இடம் நெதர்லாந்துக்கும், 10-வது இடம் டென்மார்க்குக்கும் கிடைத்துள்ளது.

208 total views, 3 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.