குடியாத்தம் கே.எம்.ஜி கல்லூரி வளாகத்தில் தனியார் துறை நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம், குடியாத்தம் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து இம்முகாமை நடத்துகின்றன. இதில் 40 க்கும் மேற்பட்ட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, ஆள்களை தேர்வு செய்கின்றன.
முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் இரா. நந்தகோபால் தலைமை வகிக்கிறார். ரோட்டரி சங்கத் தலைவர் ஜே.கே.என். பழனி வரவேற்கிறார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ஆர். அருணகிரி திட்ட விளக்க உரையாற்றுகிறார்.
240 total views, 1 views today