தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அம்மா சிறு வணிகர் கடனுதவி திட்டம் என்கிறத் திட்டத்தைத் துவக்கி வைத்தார். தமிழக அரசு மொத்தமாக 11 சதவிகித வட்டியைக் கட்டிவிடும்.
வாராவாரம் 200ரூபாய் என்கிற ரீதியில் கடனை அடைப்பவர்களுக்கு 4 சதவிகித வட்டியில் மீண்டும் கடன் வழங்கப்படும்.
எளிதில் கடன் பெறும் வகையில் 22-ந் தேதி (இன்று) முதல் பிப்ரவரி 2-ந் தேதி வரை 500 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர். ராஜு, தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர்.சிவ் தாஸ் மீனா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ முரளீதரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
306 total views, 1 views today