சிட்னி – இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது.
5 ஒருநாள் போட்டித் தொடரில் 0-4 என்ற கணக்கில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் ஏற்கனவே தோல்வியை தளுவியுள்ளது. 4 போட்டிகளிலும் இந்தியா தோற்றுள்ள நிலையில், சிட்னியில் இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று ஒய்ட்வாஷ் ஆவதிலிருந்து விடுபட வேண்டிய சூழ்நிலையில் இந்திய அணி உள்ளது.
இந்திய அணியில் அதிரடியாக மாற்றங்களை செய்ய வேண்டும் என முன்னாள் வீரர்களின் கோரிக்கை வலுத்து வரும் நிலையில், கடைசி போட்டியிலாவது இந்தியா ஆறுதல் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை இந்திய வீரர்கள் உணர்ந்துள்ளனர். இதனால் இந்த போட்டியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக மேக்ஸ்வெல் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது. இது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
339 total views, 1 views today