பிரபல நடிகை கல்பனா திடீர் மரணம்

886தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை கல்பனா தீடீரென மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

 

 

 

 

 

 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நடிகை கல்பனா. மலையாள பட உலகில் திக் விஜயம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 1983–ல் பிரபல மலையாள கதாசிரியர் வாசுதேவ நாயரின் மஞ்சு (மூடுபனி) என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகு பிரபலமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கல்பனாவின் சகோதரிகள் நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி.

 

 

இவர் ஒரு படப்பிடிப்பிற்காக நேற்று ஹைதராபாத் வந்துள்ளார். இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். திடீரென நெஞ்சுவலி காரணமாக அவர் இறந்திருக்கலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

 

கல்பனாவின் உடல் இன்று விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

671 total views, 2 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.