வேலூர் சத்துவாச்சாரி கிளை நூலகத்தின் 50–வது ஆண்டு பொன்விழா வருகிற 6–ந் தேதி நடைபெற உள்ளது.
சத்துவாச்சாரி கிளை நூலகம் 1966–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வருகிற 6–ந் தேதி ஞாயிற்றுக்கிழமை 50–வது ஆண்டு பொன்விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி 4–ந் தேதி முதல் 6–ந் தேதி வரை சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலையில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
புத்தக கண்காட்சியை நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் பாலாஜி தொடங்கி வைக்கிறார். 5–ந் தேதி பள்ளி மாணவர்களுக்கு எத்திராஜ் பள்ளியில் காலை 10 மணிக்கு ஓவியப்போட்டி நடக்கிறது. 6–ந் தேதி நடைபெறும் விழாவில் பொன்விழா வளைவு, கல்வெட்டை வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் திறந்து வைக்கிறார். பொன்விழா நினைவு மரக்கன்றை முன்னாள் மேயர் கார்த்திகேயன் நடுகிறார்.
இந்த நூலகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் என 40 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. கணினி, இணையதளம் என்ற நவீன காலத்தில் உள்ள மாணவர்கள் நூலகத்திற்கு வந்து புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற நோக்கதிற்காக நூலக பொன்விழா கொண்டாடப்படுகிறது.
238 total views, 2 views today