புதுடில்லி: ‘வரும் லோக்சபா தேர்தலை நடத்த, 5,000 கோடி ரூபாய் செலவாகும்’ என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
நாட்டின், 16வது லோக்சபா தேர்தல், அடுத்த மாதம், 7ல் தொடங்கி, மே மாதம், 12 வரை, ஒன்பது கட்டங்களாக நடைபெறுகிறது. 543 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து, தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான, எச்.எஸ். பிரம்மா கூறியதாவது: லோக்சபா தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தலை நடத்தி முடிக்க, 5,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும். ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும், தலா, 10 கோடி என்ற வகையில் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய, நான்கு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலை நடத்த, 1,000 கோடி ரூபாய் செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
348 total views, 2 views today