குடியாத்தத்தில் விடுபட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

குடியாத்தம் வட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் கே.எம்.ஜி. கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளாமல் விடுபட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் 300 பேருக்கு சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

உதவி தேர்தல் அலுவலர் வி.மணி தலைமை தாங்கினார். தாசில்தார்கள் வி.கமலக்கண்ணன், கே.விஜயன், துணை தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர்கள் மோகன், அண்ணாமலை, கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ரா.நந்தகோபால் தொடங்கி வைத்து பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 948 பணியாளர்கள் தேர்தலில் பணியாற்ற உள்ளனர். வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் அனைத்து பணிகளையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அச்சத்தை போக்கவே இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. தயக்கமின்றி தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். தேர்தல் பணி என்பது தேசத்திற்கு செய்யும் புனிதப் பணியாக அலுவலர்கள் கருத வேண்டும்’’ என்றார்.

203 total views, 2 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.