அகில இந்திய கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு நிறுவன தலைவர் ஆர்.டி.பழனி வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பவர்களை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திலும், வாக்களிப்பவர்கள் தங்களின் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றும் அதற்கேற்ற வசதியாக அரசு ஊழியர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாட்டில் உள்ள 80 சதவீதத்துக்கு மேலான கட்டுமான உடல் உழைப்பு அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் பணிக்கு சென்றால்தான் அன்றையதினம் அவர்கள் குடும்பம் பிழைக்கும். எனவே, இவர்கள் ஜனநாயக கடமையாற்ற கலெக்டர்கள் (தேர்தல் அதிகாரிகள்) மூலமாக நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு அன்று ஒருநாள் ஊதியம், ஜனநாயக கடமையாற்றுவதற்கு வழங்க வேண்டும். அப்போதுதான் 100 சதவீத வாக்குப்பதிவு உறுதி செய்யப்படும். இதனை தேர்தல் ஆணையம் ஆவன செய்ய வேண்டும்.
276 total views, 2 views today