சத்தீஸ்கரில், தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவையும், மகன் ராகுலையும் கடுமையாக தாக்கிப் பேசினார். ”இதுவரை நீங்கள் ‘2 ஜி’ ஊழல் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்; தற்போது உங்களுக்கு ‘ஜீஜாஜி’ ஊழலைப் பற்றி சொல்கிறேன் கேளுங்கள்,” என்றார்.
சத்தீஸ்கர் மாநிலம், சர்குஜாவில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது: நீங்கள் இதுவரை, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் ‘மெகா’ ஊழலான, ‘2 ஜி’ யைப் பற்றி கேள்விப்படிருப்பீர்கள். நான் உங்களுக்கு, ‘ஜீஜாஜி’யைப் பற்றி சொல்லப்போகிறேன்.
(இந்தியில், மைத்துனரை ஜீஜாஜி என அழைப்பர் )அமெரிக்க பத்திரிகையில், ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில், 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஒருவர், மூன்று ஆண்டுகளில், 300 கோடிக்கு அதிபதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது வேறு யாரும் அல்ல. மேடம் சோனியாவின் மருமகனும், ராகுலின் மைத்துனருமான ராபர்ட் வாத்ரா தான்.
அவருக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துக்கள் கிடைத்தன… காங்., ஆளும் மாநிலங்களில், மத்திய அரசின் செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தி, ஏராளமான சொத்துக்களை முறைகேடான வகையில் குவித்துள்ளார்.அமேதியில் பேசிய சோனியா, ‘அமேதி மக்களிடம் என் மகன் ராகுலை ஒப்படைக்கிறேன், அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றார். எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது;
அமேதி என்ற ஒற்றை தொகுதியை பார்த்துக்கொள்ள முடியாத ராகுலால், எப்படி இவ்வளவு பெரிய நாட்டை ஆள முடியும்?பிரதமர், மன்மோகன் சிங், கடந்த 10 ஆண்டுகளில், 1,100 தடவை வாய்திறந்துள்ளதாக பிரதமர் அலுவல செய்தித்தொடர்பாளர், பங்கஜ் பசோரி கூறியுள்ளார். இதுதான் பிரதமரின் அதிகபட்ச சாதனை.இவ்வாறு அவர் பேசினார்.
249 total views, 2 views today