அகில இந்திய வீரக்கலை முன்னேற்ற கழகத்தின் சார்பில் காட்பாடியில் தகுதியின் அடிப்படையில் மாணவர்களுக்கு கராத்தே பட்டை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு வீரக்கலையின் நிறுவனர் எம்.மனோகரன் தலைமை தாங்கினார்.
கராத்தே மாஸ்டர் காட்பாடி ரமேஷ் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு கராத்தே பட்டை தேர்வு நடந்தது. அதில் ராகுல், சதீஷ், அஜித்ராஜ் ஆகியோர் கறுப்பு பட்டைக்கு தேர்வானார்கள். ரோகித், யுவராஜ், அரிதாலட்சுமி, விக்ரம், சுபாஷ், கவுதமன் ஆகியோர் பிரவுன் பட்டைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மாணவர்களுக்கு கராத்தே பட்டைகளை வீரக்கலை முன்னேற்ற கழக நிறுவனர் மனோகரன் வழங்கி நோய்கள் வராமல் உடலை காப்பாற்றி கொள்வது எப்படி என்ற விளக்கத்தை செய்து காண்பித்தார்.
352 total views, 1 views today