வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ., பி.டெக். படிப்புக்கான விண்ணப்பம் வினியோகம் நேற்று தொடங்கியது…தமிழகம் முழுவதும் 570–க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பி.இ. மற்றும் பி.டெக் பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூன்) நடைபெற உள்ளது.
அதன்படி வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக தொடர்பு மையத்தில் நேற்று காலை பி.இ., பி.டெக் பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கியது.
பொதுப்பிரிவினருக்கு ரூ.500–ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250 என்ற கட்டணத்தில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
தந்தை பெரியார் கல்லூரிக்கு மொத்தம் 7,700 விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்பங்களை காலை 9–30 மணி முதல் மாலை 5–30 மணிக்குள் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் வருகிற 20–ந் தேதி கடைசி நாளாகும்.
390 total views, 1 views today