வேலூரை அடுத்த திருப்பத்தூரில் தொடர் விபத்து நடக்கும் நிலையில் நேற்று லாரி ஒன்று கவிழ்ந்ததால் கொதிப்படைந்த மக்கள் அங்கு விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர்….திருப்பத்தூர் – திருவண்ணாமலை மெயின் ரோடில் பேராம்பட்டு ஏரி பாலம் அருகில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. பாலத்தின் அருகே அபாயகரமான வளைவு உள்ளது. மின்னல் வேகத்தில் வரும் வாகனங்கள் அந்த வளைவு இருப்பது தெரியாமல் அதே வேகத்தில் திரும்பும்போது விபத்துக்குள்ளாகி விடுகின்றன.
இந்த நிலையில், புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு இரும்பு பாரம் ஏற்றிய லாரி அந்த வழியாக வந்தது. திருப்பத்தூர்–திருவண்ணாமலை ரோட்டில் பேராம்பட்டு ஏரி பாலத்தில் உள்ள வளைவில் அந்த லாரி வந்த வேகத்திலேயே திரும்ப முயன்றது.
ஆனால் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது. வேகத்தடை அமைக்காமல் விட்டதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என்று கூறிநெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து திருப்பத்தூர்–திருவண்ணாமலை ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
வேகத்தடை அமைக்காமல் விட்டதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என்று கூறிநெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து திருப்பத்தூர்–திருவண்ணாமலை ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வேகத்தடை அமைத்து தர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.
அதன்பேரில் சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
240 total views, 3 views today