குடியாத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யுமாறு மாவட்ட கலெக்டர் ஆர்.நந்தகோபால், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெ.பிரசன்னா ஆகியோர் உத்தரவிட்டனர்…அதன்பேரில் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் கே.கருணாநிதி தலைமையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், பரதராமி, லத்தேரி, பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 36 பள்ளிகளின் 112 வாகனங்களில் ஆவணங்களை சரிபார்த்தனர். பாதுகாப்பு அம்சங்கள், அவசரகால வழி, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, சரியான அளவில் படிக்கட்டுகள் மற்றும் டிரைவர்களின் லைசென்ஸ் ஆகியவற்றை ஆய்வு செய்து தகுதி சான்றிதழ் அளித்தனர்.
591 total views, 1 views today