TCS : தகவல் தொழில்நுட்ப துறையில் உலகின் சக்தி வாய்ந்த நிறுவனம்

tata_consultancy_services_bannerநம் நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனமான TCS உலகின் சக்தி வாய்ந்த IT பிராண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களை பிராண்ட் பைனான்ஸ் என்ற நிறுவனம் மதிப்பீடு செய்தது. மதிப்பீட்டின் அடிப்படையில் உலகின் சக்தி வாய்ந்த மற்றும் மதிப்புமிக்க நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2016-ம் ஆண்டுக்கான தரப்பட்டியலில் ஐடி துறையில் உலகின் சக்தி வாய்ந்த பிராண்டாக டிசிஎஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதிப்பீட்டின்படி டிசிஎஸ் நிறுவனம் 78.3 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

 

வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துதல், மற்றும் பணியாளர்களின் மனநிறைவு ஆகியவைகளில் டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று பிராண்ட் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.

 

இந்த ஆண்டின் மதிப்புமிக்க பிராண்டாக ஆப்பிள் நிறுவனம் தேர்வாகியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

351 total views, 2 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.