பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டில் திறமையை வளர்க்கவும், எதிர்காலத்தில் அவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையிலும் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் கோடைகால இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 11–வது ஆண்டாக இந்த பயிற்சி முகாம் வி.ஐ.டி.அண்ணா அரங்கம் அருகேயுள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று தொடங்கியது.மே 15–ந் தேதி வரை தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமை பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
பயிற்சியின்போது மாணவ, மாணவிகளுக்கு தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, எறிபந்து, கராத்தே, யோகாசனம், சதுரங்கம், மேஜைபந்து உள்பட பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நிகழ்ச்சியில் வி.ஐ.டி. துணைத்தலைவர் சேகர் விசுவநாதன் ஆலோசனை வழங்கினார். முடிவில் உடற்பயிற்சி துணை இயக்குனர் மங்கையர்கரசி அருண் நன்றி கூறினார்.
முகாமில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு காட்பாடி, சித்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் காலை 6.15 மணிக்கு இலவச பஸ் இயக்கப்படுகிறது.
329 total views, 1 views today