குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 30–ந் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது…4–ந் தேதி தேர்வீதி உலாவும், 15–ந் தேதி கெங்கை அம்மன் சிரசு ஊர்வலமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கெங்கையம்மன் கோவில் சார்பிலும், புஷ்ப வியாபாரிகள் சங்கம் சார்பிலும், நடுப்பேட்டை நண்பர்கள் குழு சார்பிலும் 3 புஷ்ப பல்லக்குகள் வீதி உலா நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கெங்கையம்மன் மற்றும் உற்சவர் சிலைகள் அமர்த்தப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
283 total views, 1 views today