இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நோட்டா-வுக்கு தமிழகத் தில் 5.50 லட்சம் வாக்குகள் கிடைத் துள்ளன…எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர் களுக்காக மின்னணு வாக்குப் பதிவு கருவிகளில் “மேற்கண்ட நபர்களில் எவரும் இல்லை” (நன் ஆப் தி அபவ் நோட்டா) என்னும் பொத்தான் பொருத்தப்பட்டது.தமிழகத்தில் இந்த மக்களவைத் தேர்தலில் 4.05 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில், 5,50,420 பேர் நோட்டாவுக்கு வாக்களித்திருப்பதாக தேர்தல் துறையினர் தெரிவித்தனர்.
247 total views, 1 views today