அணைக்கட்டு ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் 124–வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கருங்காலி ஊராட்சியில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு ஊராட்சி தலைவர் உஷா சுரேஷ் மாலை அணிவித்தார்.
கீழ்கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அஸ்லாம் அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அதையடுத்து கூடநகரம் ஊராட்சியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா நடந்தது. முன்னாள் ராணுவ வீரர்களின் சேவையை போற்றும் வகையில், அவர்கள் நினைவாக ராணுவ வீரர் சாலை என்ற பெயர் பலகையை கூடநகரம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாபால் அண்ணாதுரை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ராஜசேகர் வரவேற்று பேசினார். முன்னாள் ராணுவ வீரர்கள் எ.செல்வராஜ், ஆர். ஆனந்தன், அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ரவி, வளர்மதி, மோகன், பிரேம், அவின், கேசவன், பூவரசன், கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
253 total views, 2 views today