செவிலியர்களுக்கு முன்னோடியான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமான மே மாதம் 12–ந் தேதி உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது…அதன்படி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உலக செவிலியர் தினம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி தலைமையில் 200–க்கும் மேற்பட்ட செவிலியர்கள் எரியும் மெழுகுவர்த்தியை கைகளில் ஏந்தி, சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவோம் என்ற உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.
அதேபோல் வேலூரில் மற்ற மருத்துவமனைகளிலும் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றனர்
375 total views, 1 views today
