கே.வி.குப்பம் தொகுதியில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு

கே.வி.குப்பம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் கே.வி.குப்பத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தொகுதி செயலாளர் டி.ஆர்.முரளி தலைமை தாங்கினார்.

தேர்தல் பொறுப்பாளர் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் புருஷோத்தம், கோதண்டன், ஒன்றியக்குழு தலைவர் லோகநாதன், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், எல்.எம்.பாபு, வனராஜ், சீனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் அலுவலகத்தை தேர்தல் பொறுப்பாளர் கே.ஏ.கே.முகில் திறந்து வைத்து பேசினார்.

இதில் கட்சி நிர்வாகிகள் செஞ்சி வெங்கடேசன், ரமேஷ்குமார், கஜேந்திரன், பொன்முடி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் சுமதிவெங்கடேசன் நன்றி கூறினார்.

252 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.