டி20 உலகக்கோப்பை : டோணி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

India-Team-Warm-Up-Schedule-T20-World-Cup-2016ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை டி-20 போட்டிகளுக்கு டோணி தலைமையிலான 15 வீரர்களைக் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

5 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி 20 தொடர் பிப்ரவரி 24-ந் தேதி முதல் மார்ச் 6-ந் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெறும் ஒரு அணியும் கலந்துகொள்கிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் 8-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை 6-வது உலகக் கோப்பை டி20 போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன. இந்த இரு போட்டிகளுக்குமான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
டோணி தலைமையிலான இந்திய அணி வீரர்கள்:

 

  1. மகேந்திர சிங் தோனி (கே&வி.கே)
  2. விராட் கோலி
  3. ஷிகர் தவான்
  4. ரோஹித் சர்மா
  5. யுவராஜ் சிங்
  6. சுரேஷ் ரெய்னா
  7. ஹர்பஜன் சிங்,
  8. ரவீந்திர ஜடேஜா
  9. அஜிங்கே ரஹானே
  10. ரவிச்சந்திரன் அஸ்வின்
  11. முஹமது ஷமி
  12. ஹர்த்திக் பாண்டியா
  13. ஜாஸ்பிரிட் பும்ரா
  14. பவன் நெகி
  15. ஆஷிஷ் நெஹ்ரா

342 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.