‘தமிழ் புத்தாண்டு தினமான, ஏப்ரல், 14ம் தேதி, தேர்தல் பிரசாரத்திற்காக, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, தமிழகம் வர வேண்டும்’ என, அவருக்கு, தமிழக பா.ஜ., வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக, மோடி தரப்பிலும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பா.ஜ., அணியில் சேர்ந்துள்ள கட்சிகள் எல்லாம், மோடி வருகையையும், அவரது பிரசாரத்தையும் பெரிதும் நம்பி உள்ளன. ம.தி.மு.க., – பா.ம.க., – தே.மு.தி.க., தலைவர்களை பொறுத்தவரையில், மோடி தமிழகம் வர வேண்டும் என்றும், ஒரே மேடையில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பேச வேண்டும் என, விரும்புகின்றனர்.
277 total views, 1 views today
