அணைக்கட்டு,வேலங்காடு வல்லண்ட ராமம் பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா கோலாகலமாக நடந்தது…வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் அணைக் கட்டு அருகே வேலங்காடு வல்லண்டராம் பொற்கொடி அம்மன் புஷ்பரத ஏரித்திருவிழாவும் ஒன்று.அதன்படி சித்திரை மாத கடைசி புதன்கிழமையான நேற்று திருவிழா நடந்தது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் வசிப்பவர்களும், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் நேற்று முன்தினம் முதலே அங்கு வரத்தொடங்கினர்.
ஏராளமான பக்தர்கள் தங்களது பாரம்பரிய வழக்கப்படி பச்சை ஓலை கட்டிய மாட்டு வண்டிகளில் வந்தனர்.கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உப்பு, மிளகு, கோழிகளை சூறையிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
305 total views, 1 views today
